On this page
தீர்ப்பாயம் பற்றி
நிர்வாக மதிப்பாய்வு தீர்ப்பாயம் என்பது ஆஸ்திரேலிய அரசாங்க துறைகள், முகவர் நிலையங்கள் அல்லது அமைச்சர்களால் எடுக்கப்பட்ட பரந்த அளவிலான முடிவுகளை மதிப்பாய்வு செய்யக்கூடிய ஒரு சுயாதீனமான அமைப்பாகும். நீங்கள் ஒரு முடிவுடன் உடன்படவில்லை என்றால், நீங்கள் ஒரு மதிப்பாய்வுக்கு எங்களிடம் விண்ணப்பிக்கலாம்.
உரைபெயர்ப்பாளர் ஒருவரைக் கேளுங்கள்
பின்வரும் சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு உரைபெயர்ப்பாளர் தேவைப்படலாம்:
- உங்கள் வழக்கு அல்லது எங்கள் செயல்முறைகள் பற்றி எங்களிடம் கேள்விகள் கேட்க விரும்பும்போது
- உங்கள் வழக்கு பற்றிய விசாரணை, கலந்தாய்வு அல்லது பிற கூட்டத்தில் பங்கேற்குமாறு நாங்கள் உங்களைக் கேட்டுக்கொள்ளும்போது.
ஒரு விசாரணை அல்லது கலந்தாய்விற்கு
ஆங்கிலம் உங்கள் முதல் மொழியாக இல்லாவிட்டால், தீர்ப்பாயத்தில் ஒரு விசாரணை அல்லது கலந்தாய்வில் பங்கேற்குமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டால், உங்களுக்காக ஒரு உரைபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்யுமாறு நீங்கள் எங்களிடம் கேட்கலாம். உரைபெயர்ப்பாளருக்கு நாங்கள் பணம் செலுத்துவோம்.
நாங்கள் உங்களுக்கு அனுப்பும் கடிதம் அல்லது மின்னஞ்சலில் உள்ள அறிவுறுத்தல்களைப் படித்துவிட்டு, விசாரணை அல்லது கலந்தாய்வு நாளுக்கு முன்னர் உங்களுக்கு ஒரு உரைபெயர்ப்பாளர் தேவைப்பட்டால் எங்களிடம் கூறுங்கள்.
ஒரு விசாரணை அல்லது கலந்தாய்வில் உங்களுக்காக உரைபெயர்க்குமாறு ஒரு உறவினர் அல்லது நண்பரை நீங்கள் கேட்க முடியாது.
எங்களை தொடர்பு கொள்ள
உள்ளூர் தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்திற்கு, நீங்கள் எங்களுடன் உங்கள் மொழியில் பேசுவதற்கு மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பிற்கான சேவை (TIS)-ஐப் பயன்படுத்தலாம்.
நீங்கள் அழைப்பதற்கு முன், தீர்ப்பாயத்தின் ஏதேனும் தகவல் அல்லது கடிதங்களை உங்களுடன் வைத்திருங்கள்.
- TIS-ஐ131 450 (அல்லது +61 3 9268 8332, நீங்கள் வெளிநாட்டில் இருந்தால்) என்ற எண்ணில் அழையுங்கள்.
- ஆபரேட்டரிடம் சொல்லுங்கள்:
- உங்கள் மொழி
- எங்கள் பெயர் (நிர்வாக மதிப்பாய்வு தீர்ப்பாயம்)
- எங்கள் தொலைபேசி எண் (1800 228 333)
- TIS உங்களை எங்களுடன் இணைக்கும். நாங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கிறோம்.
இந்த வலைத்தளத்தில் உரையை மொழிபெயர்க்கவும்
எங்கள் இணையதளத்தில் பல மொழிகளில் தகவல்களை மொழிபெயர்க்க வசதி ஒரு கருவி உள்ளது. பெரும்பாலான இணைய உலாவிகளில் உங்கள் மொழியில் உரையைப் படிக்க உதவும் அமைப்புகளும் உள்ளன.
முக்கிய தகவல்
தானியங்கி வசதியை பயன்படுத்தி நீங்கள் மொழிபெயர்க்கும் எந்த உரையும் ஒரு நபரால் மொழிபெயர்க்கப்படவில்லை, எனவே அது துல்லியமாக இருக்காது. சட்டக் காரணங்களுக்காக மொழிபெயர்க்கப்பட்ட தகவலை நீங்கள் சார்ந்திருக்க வேண்டியிருந்தால் நீங்கள் கூடுதல் உதவியைப் பெற வேண்டும்.
ரீட்ஸ்பீக்கர் என்ற நிறுவனம் மூலம் வழங்கப்படுகிற எங்கள் இணையதளத்தில் இருக்கின்ற வசதியை நீங்கள் பயன்படுத்தும்போது, , கூகிள் மொழிபெயர்ப்பால் இயக்கப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி உரை மொழிபெயர்க்கப்படுகிறது. துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்க நியாயமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன, இருப்பினும், எந்த தானியங்கி மொழிபெயர்ப்பும் சரியானதல்ல அல்லது மனித மொழிபெயர்ப்பாளர்களை மாற்றும் நோக்கம் இல்லை. இந்த வலைத்தளத்தின் பயனர்களுக்கு மொழிபெயர்ப்புகள் ஒரு சேவையாக வழங்கப்படுகின்றன, மேலும் அவை 'உள்ளபடியே' வழங்கப்படுகின்றன. துல்லியம், நம்பகத்தன்மை அல்லது சரியானது குறித்து வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறைமுகமான எந்த வகையான உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. ரீட்ஸ்பீக்கர் அல்லது நிர்வாக மதிப்பாய்வு தீர்ப்பாயம் எந்த வகையிலும் மொழிபெயர்ப்புக்கு பொறுப்பல்ல.
எப்படி மொழிபெயர்ப்பது
டெஸ்க்டாப் கணினிகள் போன்ற பெரும்பாலான பெரிய திரை சாதனங்களுக்கு கீழேயுள்ள வழிமுறைகள் நன்றாக வேலை செய்கின்றன.
உங்கள் மவுஸ் மற்றும் கர்சர் மூலம் நீங்கள் மொழிபெயர்க்க விரும்பும் உரையை ஹைலைட் செய்யவும். 3 விருப்பங்களைக் கொண்ட ஒரு பெட்டி தோன்றும்.
தீர்ப்பாயத்தில் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர். ஊழியர்கள் ஆஸ்திரேலிய பொதுச் சேவையின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள், வழக்குகளை விசாரித்து முடிவு செய்பவர்கள், சட்டரீதியான அலுவலக பொறுப்பாளர்கள்.
இந்த அமைப்பு ஜனாதிபதியால் வழிநடத்தப்படுகிறது, அவர் தீர்ப்பாயத்தின் வணிகத்தை நிர்வகிப்பதற்கும், எங்கள் நோக்கங்களுக்கு ஏற்ப திறமையாகவும் திறம்படவும் செயல்படுவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பானவர்.
சட்டப்படி, ஜனாதிபதி கூட்டாட்சி நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்க வேண்டும்.
'மொழிபெயர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மொழியைக் கண்டுபிடிக்க பட்டியலைத் தேடவும் அல்லது கீழே ஸ்க்ரோல் செய்யவும்.
கேள்
அகராதி
மொழிபெயர்க்க
மொழி தேடல்
அரபு
சீனம் (மாண்டரின்)
டானிஷ்
டச்சு
ஆங்கிலம்
பின்னிஷ்
பிரெஞ்சு
ஜெர்மன்
கிரேக்கம்நீங்கள் ஹைலைட் செய்த உரை நீங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்தவுடன் மொழிபெயர்க்கப்படும். இந்த எடுத்துக்காட்டில், நாங்கள் அரபு மொழியைத் தேர்ந்தெடுத்தோம்.
கவனத்திற்கு: கூகிள் மொழிபெயர்ப்பு மூலம் இயக்கப்படும் மொழிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி உங்கள் வசதிக்காக உரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துல்லியமான மொழிபெயர்ப்பை வழங்க நியாயமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இருப்பினும், எந்த தானியங்கி மொழிபெயர்ப்பும் சரியானதல்ல அல்லது மனித மொழிபெயர்ப்பாளர்களை மாற்றும் நோக்கம் இல்லை.
மொழிபெயர்ப்புகள் இந்த வலைத்தளத்தின் பயனர்களுக்கு ஒரு சேவையாக வழங்கப்படுகின்றன, மேலும் அவை "உள்ளபடியே" வழங்கப்படுகின்றன. துல்லியம், நம்பகத்தன்மை அல்லது சரியானது குறித்து வெளிப்படுத்தப்பட்ட அல்லது மறைமுகமான எந்த வகையான உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. ரீட்ஸ்பீக்கரோ அல்லது வலைத்தள உரிமையாளரோ மொழிபெயர்ப்புக்கு எந்த வகையிலும் பொறுப்பல்ல.
எனக்கு புரிகிறது
மூடு